kalLo prAnDs!

WellcomE to My Profile..

Wednesday, November 19, 2008

Clone shot செய்வது எப்படி ?

ஒருத்தரப்போல ஒன்பதுபேர் இந்த உலகத்துல இருக்கிறாங்க என்டு சிலபேர் ரீல் விட்டு கேள்விப்பட்டிருப்பீங்க.அப்பிடி ஒன்பது பேரஇல்லீங்க இரண்டு பேரயாவது கண்டிருக்கீங்களா ? சினிமாலயே இரட்டை வேடம், மூன்று வேடம் ஏன் அன்மையில தசாவதாரமே வந்துட்டுங்க.அப்பிடி இருக்க ஏன் நம்மளயே நாங்க  இரண்டா, மூன்றா.... ஏன் பத்தா மாத்தக்கூடாது?

அதுக்கென்ன மாத்திட்டா போச்சி... J


தேவையானவை

  • Digital Camera  
  • Camera Stand
  •  Photoshop (மேலோட்டமான பரீட்சயம் போதுமானது)

படிமுறை 1

நிலையான இடத்தில் கமராவை அசையாதவண்ணம் பெருத்தவும்(Camera Stand க்கு எங்கபோறது என்டு கேக்காதீங்க, நானும் Stand  இல்லாமத்தான் எடுத்தனான்)

டிமுறை 2

உங்களது நிலையை மாற்றி மாற்றி ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களை எடுக்கவும்


(குறிப்பு : உங்களது நிலையை மட்டும் மாற்றவும்(No change in Background), உங்களது நிலைகள் கமராவின் கோணத்தில் இருந்து பார்கும்போது மேற்பொருந்தாமல்(overlap) இருப்பது உசிதம்)

படிமுறை 3

  •  எல்லாப்புகைப்படங்களையும் Photoshop ல் திறக்கவும்(வெவ்வேறு Layers ல்)
  •  Clone Stamp tool உதவியுடன் ஒரு layer ல் உள்ள உங்களது உருவத்தை மற்றய layer ல் Clone செய்யவும் 

இரண்டு படங்களையும் Layer 0, Layer 1 இல் படத்தில் காட்டியவாறு ஒன்றுடன் ஒன்று மேற்பெருந்தும் வண்ணம் திறக்கவும்

Layer 1 இன் Opacity 40% ஆக குறைக்கவும்.இப்போது நீங்கள் படத்தில் காட்டியவாறு ஒரு தோற்றப்பாட்டைக்காண முடியும்

இப்போது Layer 1 தெரிவுசெய்திருக்கும் நிலையில் Clone Stamp tool ஜ அழுத்தி பின் ஏதாவது அறியக்கூடிய x,y ஆள்கூறுகளில் Alt + Click செய்யவும்(படத்தில் காட்டியதிற்கினங்க )

பின் Layer 0 ஜ தெரிவுசெய்து அதே x,y ஆள்கூறுகளில் Click செய்து Layer 1 ல் தெரியும் விம்பம் முழுவதுமாக தீட்டவும்

இவ்வாறு முழுவதுமாக தீட்டியபின்பு நீங்கள் கீழ்கண்டவாறான படத்தைப் பெறலாம்.


சரி இனி என்ன கமராவ எடுத்திட்டு கிழம்புங்க !!! Best of Luckuuuuuu !!!